இயல்தமிழ்

அருணகிரிநாதர் அருளிய சிதம்பரம் திருப்புகழ்

Rate this post

நஞ்சினைப் போலும்

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய ‘சிதம்பரம் திருப்புகழ்’ வரிகள்.

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை நம்புதற் றீதெனநி னைந்துநாயேன்

நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை நங்களப் பாசரண மென்றுகூறல்

உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல் உன்சொலைத் தாழ்வுசெய்து மிஞ்சுவாரார்

உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர் உம்பருக் காவதினின் வந்துதோணாய்!

கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு கண்களிப் பாகவிடு செங்கையோனே!

கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு கஞ்சுகப் பான்மைபுனை பொன்செய்தோளாய்!

அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம் அந்தரத் தேறவிடு கந்தவேளே!

அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை அம்பலத் தாடுமவர் தம்பிரானே!

Sow. ARYA NAGARAJAN

Comment here