World

ஆப்கன் பள்ளியில் தற்கொலைப் படைத்தாக்குதல் – பலி எண்ணிக்கை உயர்வு

Rate this post

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் தஷ்ட்-இ-பார்ச்சி என்ற நகரில் தனியார் உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இக்கல்வி மையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர்.

அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Comment here