Tamilnadu

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் – இயற்கை சாயம் ஏற்றி கைத்தறியில் நெய்யப்பட்ட அற்புதமான காஞ்சிபுரம் பட்டு புடவை

5/5 - (3 votes)

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ்

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் கலெக்ஷன் ஆகும்.

1856ல் செயற்கை முறையில் சாயமிடுதல் அறிமுகப்படுத்தப்படும் வரை அனைத்து இழைகளும் இயற்கை முறையிலேயே சாயமிடப்பட்டு வந்தன. செயற்கைச் சாயங்கள் வசதியாகவும், செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் விரைவிலேயே அவை இயற்கை உட்பொருட்களுடன் கூடிய நிறமூட்டிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டன. செயற்கைச் சாயங்கள் காரணமாக நச்சுக் கழிவுகள் ஏற்பட்டு சுற்றுச்சுழலுக்கு தாக்கம் ஏற்படுவது தற்போது கண்கூடாக அனைவராலும் உணரப்படுகிறது.

இயற்கை சாயங்கள் மற்றும் சாயத்தை பிணைக்கும் சாதனமான மோர்டன்ட்கள் ஆகியவற்றை உருவாக்கும் பண்டைய வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. அல்லது சிறு குழுக்களில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே பின்பற்றும் கலையாக இவை ஆகிவிட்டன. ப்ளாக் பிரிண்டட் காட்டன் சேலைகள் நெய்யப்பட்ட பிறகே நிறமூட்டப்பட்டன. இருப்பினும், காஞ்சிபுரம் சேலைகளுக்கான பட்டுத்துணிகள் முதலில் சாயம் ஏற்றப்பட்டு அதன் பின்னர் தான் தறியில் நெய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள ஆரெம்கேவி மையத்தில் நடத்திய பத்தாண்டு கால ஆராய்ச்சிக்குப் பின்னர் நாங்கள் டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்ததோடு எங்கள் முயற்சியிலேயே பிரத்தியேக நிறங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். நேச்சுரல்ஸ் கலெக்ஷன்ஸ் சேலைகள் மஞ்சிஸ்தா (இந்தியன் மேடர்) ஆகியவற்றிலிருந்து தருவிக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் அம்பர் நிறச்சாயல்களைக் கொண்டுள்ளன. அரக்கு (லேக்) மிகவும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கவும், இண்டிகோ நிறமியானது நீல நிறச்சாயல்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் (ஃபெனுக்ரீக்), மைரோபலன் என்ற நெல்லிக்கனி வகைகள், சிகப்பு மண், மாதுளைப் பழ தோல்கள், மல்பெர்ரி என்ற முசுக்கொட்டை இலைகள் மற்றும் சாமந்திப்பூ போன்றவை சாயங்களை உருவாக்குவதற்கு பயன்படும் இயற்கை உட்பொருட்களில் சிலவாகும்.

எங்கள் மையத்தில் பட்டு நூல்கள் தயாரிக்கும் செயல்முறை நிறைவு பெற்றவுடன் அவற்றிற்கு இவ்வகையில் இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்ட சாயங்கள் இடப்பட்டு, பின்னர் எங்கள் தேர்ந்த நெசவாளர்களால் தறிகளில் நெய்யப்படுகின்றன.

கடந்த பத்தாண்டு காலத்தில் இப்போது முதன்முறையாக வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயமிடப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலை ஒன்றை வாங்கி தங்கள் கலெஷனில் சேர்த்துக் கொண்டு இனிவரவிருக்கும் விழாக்காலத்தை சிறப்பாக கொண்டாட முடியும்.

ஆரெம்கேவி லினோ சேலைகள்

ஆரெம்கேவி லினோ சேலைகள் என்பது லினோ தொழில்நுட்பம் மூலம் 40% எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளாகும். பட்டுத்துணி நெசவில் லினோ தொழில் நுட்பத்திற்கான காப்புரிமையை ஆர்எம்கேவி பெற்றுள்ளது. மிக நேர்த்தியான பட்டுநூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் இந்த அசல் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் ‘காற்றுக்கு ஒப்பான இலேசான’ வடிவமைப்புடன் இருக்கும் வகையில் கைகளால் நெய்யப்பட்ட அற்புதமான படைப்பாகும். அதாவது, இந்த இலேசான எடை கொண்ட பட்டுச்சேலைகள் இயல்பாக ‘சுவாசிக்கும் வகையில்’ அதாவது காற்றோட்டத்துடன் கூடியதாக இருக்கும் வகையில் அமைந்துள்ளதை இது குறிக்கும்.

ஆரெம்கேவி லினோ சேலைகள் தற்கால சந்ததி இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேசான எடை கொண்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் பளிச்சென்ற வண்ணங்கள் மற்றும் பிரமிப்பூட்டும் வடிவமைப்புகளில் வழங்கப்படுகின்றன.

எங்கள் பிரத்தியேகமான புதுமைப் படைப்புகள் அனைத்தையும் போலவே லினோ பட்டுப்புடவைகளும் தமிழ்நாட்டிலுள்ள ஆரெம்கேவி மையத்தில் கைகளால் நெய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. பட்டானது எங்கள் கைவினைஞர்களால் செயலாக்கம் செய்யப்பட்டு லினோ சேலைகளுக்கான மிக நேர்ததியான பட்டுநூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பின்னர் பட்டுநூல் இழைகள் எங்கள் தேர்ந்த நெசவாளர்களால் காப்புரிமை பெற்ற நெசவு முறையின் மூலம் கைகளால் நெய்யப்படுகிறது. இதனால், இந்த காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் குறிப்பாக காற்றோட்டம் உடையதாக இருக்கின்றன.

விழாக்காலத்திற்கான ஆரெம்கேவி லினோ பட்டுச்சேலைகள் இதுபோன்ற நெசவுமுறை மூலம் உருவாக்கப்படுவதால் எளிமை மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றின் சங்கமத்துடன் எந்த கொண்டாட்டத்திற்கும் சிறப்பினை கூட்டும் வகையில் இவை அமைந்துள்ளன.

ஆரெம்கேவி பற்றி

1924ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரெம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் அதன் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளுக்கு புகழ் பெற்றது. இதன் கலையம்சம் மற்றும் புதுமை ஆகியவற்றுக்காக பல தேசிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ இதுநாள் வரை பல தனித்துவமான பட்டுச்சேலைகளை உருவாருக்கியுள்ளது. இதில் சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வரிய பூக்கள் மற்றும் குறள் ஓவியம் போன்ற கருத்தாக்க அடிப்படையிலான சேலை ரகங்களும் கிராண்ட் ரிவர்சிபிள் சேலை, 50000 கலர் சேலை, வர்ணஜாலம் ரகங்கள், புதுமையான நேச்சுரல் சில்க் ரகங்கள் மற்றும் லினோ லைட் சில்க் என்ற இலேசான எடைகொண்ட பிரத்தியேக பட்டுச்சேலை ரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தன. இன்று நீங்கள் உங்களுக்கென்றே பிரத்தியேகமாக எங்கள் ஆரெம்கேவி நெசவாளர்களின் குழுவைக் கொண்டு 50000க்கும் மேற்பட்ட வண்ணங்களைக் கொண்ட சேலையை உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஆரெம்கேவி தன்னகத்தே பல ரகங்களிலான ஃபேன்ஸி சேலைகள் எம்பிராய்டரி சேலைகள், சல்வார் கமீஸ், மேலும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரகங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

நேச்சுரல்ஸ் கலெக்ஷன்ஸ் என்பது ஆரெம்கேவியின் சமீபத்திய புதுமைப் வழிமுறைகளிலிருந்து மிகவும் ஆடம்பரமான, நீடித்து இருக்கக்கூடிய டிசைன்களை உருவாக்கி அளிக்கிறது.

இண்டிகோ சேலை

பாரம்பரிய இண்டிகோ எனும் நீல நிற இயற்கை சாயம் ஏற்றி கைத்தறியில் நெய்யப்பட்ட அற்புதமான காஞ்சிபுரம் பட்டு புடவை

இந்தப் புடவையில் இண்டிகோ நீளம் உடல் வண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தனித்துவமான திலக பூக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தங்க நிற ஜரிகையால் மல்லிகை மொட்டு வடிவமும் பார்டரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய மயில் மாங்காய் வடிவங்களை இயற்கை யான மல்பரி இலை சாயத்திலும் மற்றும் மரபுசின்களைக் கொண்டு குயில் கண் வடிவமும் பயன்படுத்தி நெய்யப்பட்ட புடவையில் கான்ட்ராஸ்ட் பிங்க் வண்ணம் முந்தானை யில் மயில் மாங்காய் போன்ற வடிவங்களோடு ஜரிகை மூலம் நேர்க்க கோடுகளை இணைத்து நெய்யப்பட்ட அழகிய காஞ்சிப்பட்டு தனித்துவமிக்கும் இண்டிகோ வண்ணத்திற்கு இந்தப் புடவை சமர்ப்பணம்.

பேபி பிங்க் சேலை

பதிமுக மரத்தில் எடுக்கப்பட்ட இயல் வண்ணமான மென்பிங் வண்ணத்தில் கைத்தடியில் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டு புடவை தாமரை மொக்குகளின் வடிவங்கள் தங்க ஜரியை மற்றும் அரக்கு வண்ணத்தால் உடல் முழுவதும் நீயப்பட்டு அதற்கேற்றார் போல் சிறிய தாமரை மொக்கு வடிவங்களை குறுக்கு கோடுகளாக பார்டர் மற்றும் முந்தானையிலும் தேன்கூடு வடிவங்களுக்குள் நேர்த்தியாக வரைபட எளிமையும் அழகும் கொண்ட பட்டுப்புடவை

ஜரிகை கட்டம் சேலை

இயற்கை வண்ணங்களோடு கை த்தடியில் நெய்யப்பட்ட இந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவையின் வண்ணசேர்க்கை மற்றும் டிசைன்கள் தனித்துவமானது. மரப்பிசின்களை க் கொண்டு சாயம் ஏற்றப்பட்ட அரக்கு வண்ணம், புடவையின் உடல் பகுதியிலும் அதற்கு பொருத்தமான பொன் நிற ஜரிகை கட்டம் புடவை யின் தனித்துவத்தையும் அதற்குள் நெய்யப்பட்ட வங்கி, குயில்கன், பாய்மடி, அரை மாடம் போன்ற பாரம்பரியமிக்க வடிவங்கள் நெசவாளியின் தனித் திறனை வெளிப்படுத்துகின்றன. புடவையின் உடலில் வரக்கூடிய வடிவங்களை செவ்வல்லி கொடியிலிருந்து பெறப்பட்ட வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது, சேலையில் காணப்படும் கடல் நீல வண்ணம் இண்டிகோமற்றும் சாமந்திப்பூ கொண்டு சாயமிடப்பட்டுள்ளது.

11 இன்ச் பச்சை கோர்வை சேலை

இந்தப் பாரம்பரியமான காஞ்சிபுரம் கோர்வை பட்டு புடவை மல்பரி இலைகள் மற்றும் மஞ்சிஸ்தாவைக் கொண்டு சாயமிடப்பட்டுள்ளது. இந்தப் புடவையின் இலை பச்சை நிறம் மல்பரி இலைகளைக் கொண்டு சாயமிடப்பட்டுள்ளது, இச்சாலையின் 11 in அகலம் கொண்ட கான்ட்ராஸ்ட் பார்டர் மஞ்சிஸ்தாவை கொண்டு சாயமிடப்பட்டுள்ளது, பார்டரில் காணப்படும் தாமரை மொட்டு மற்றும் வரிகள் தங்க ஜருகை யினால் நெய்யப்பட்டுள்ளன.

பாடலில் காணப்படும் அரக்கு நிறக்ககோடுகள் மரப்பிசின் மற்றும் மஞ்சிஸ்தாவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோடுகளின் அருகே காணப்படும் நீல நிறம் இண்டிகோவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன,

ஏர் இந்தியா சேலை

சேலையின் முந்தானை சீப்பு ரேக்குகள் மூலம் தங்க ஜரிகை பயன்படுத்தி  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவை மரப்பிசின் மாதுளை ஓடு மற்றும் இண்டிகோவை கொண்டு சாயமிடப்பட்டுள்ளன,

இந்தச் சே லையின் சிறப்பு மேலே வளர்ந்து வரும் தங்க நிற ஜருகை கோடுகளே இந்தப் புடவை யின் இளஞ்சிவப்பு வண்ணம் மரப்பிசின் மற்றும் மாதுளை ஓடுகளைக் கொண்டு சாயமிடப்பட்டுள்ளது, முந்தானை நோக்கி மேலே உயர்ந்து வரும் ஜரிகை கோடுகள் மஞ்சிஷ்தாவைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது, கண் கவரும் முந்தானை இண்டிகோவைக் கொண்டு சாயம் இடப்பட்டுள்ளது, முந்தானையில் உள்ள நீல நிறத்தை மெருகேற்றும் விதமாக தங்க நிற ஜரிகை மூலம் சீப்பு ரேக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் குதிரை சேலை

பொன்னிறத்தில் மின்னும் இந்த காஞ்சிபுரம் பட்டு சேலை கடுக்காய் மஞ்சிஷ்டா மற்றும் மல்பெரி இலைகளை கொண்டு சாயமிடப்பட்டுள்ளது. சேலையின் உடலில் காணப்படும் பொன்னிற வண்ணம் மூன்று இயற்கை பொருட்களான கடுக்காய் வெந்தயம் மற்றும் மஞ்சிஸ்தாவைக்  கொண்டு சாயமிடப்பட்டுள்ளது,

துரிதமாய் வடிவமைக்கப்பட்ட கட்டம் வை ரம் துத்தரிப்பு போன்ற வடிவங்கள் இச்சாலை யின் இரட்டை நிற வர்ணத்தினால் மெருகேற்றப்பட்டுள்ளன, பார்டரில் ருத்ராட்சம் மற்றும் அறை மாடும் அழகான முறை யில் வடிவமைக்கப் பட்டுள்ளன, இச்சலையில் காணப்படும் பச்சை நிறம் மல்பரி இலைகளைக் கொண்டும் கம்சன் நிறம் மறப்பசீனை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜால் கமலம் சேலை

இந்த காஞ்சிபுரம்பட்டு சேலை இயற்கை வடிவங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதனை கொண்டு சாயமும் இடப்பட்டுள்ளது. இச்சேனில் உடல் பகுதி அழகாய் வடிவமைக்கப்பட்டுள்ள கொடியின் இடை யே தாமரை முட்டுக்களும் அதன் பச்சை நிற வண்ணம் இண்டிகோமற்றும் சாமந்திப் பூவின் கலவையில் இருந்து பெறப்பட்டுள்ளது,

இயற்கை  யத்தினால் வரை பட இப்பட்டுப் புடவை யில் வாடர் பகுதியில் குயில் கண், கமலம் மற்றும் ருத்ராட்சம் போன்றவை தங்க நிற ஜருகைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த சேலையின் முந்தானைப் பகுதியில் கமலம் குயில் கண்ருத்ராட்சம் மட்டுமல்லாமல் வங்கி மற்றும் பன்னீர் சொம்பு போன்றவற்றினை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ருத்திராக்ஷம் பார்டர் சேலை

தனித்துவமான வடிவமைப்புகளை கொண்ட இந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவை மஞ்சிஷித்தாவைக் கொண்டு சாயமிடப்பட்டுள்ளது. உலகின் பழமையான இயற்கை சாயங்களில் ஒன்றான மஞ்சிஷ்டாவைக் கொண்டு சேலையின் உடல் பகுதி சாயம் இடப்பட்டுள்ளது, அழகிய வடிவம் கொண்ட பூக்கள் இச்சேலையில் உடலெங்கும் தங்க நிற ஜரிகை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, சேலையில் தனித்துவமான சின்னக்கரை மற்றும் பெ       ரிய கரையில் பறக்கும் குதிரை கொடிகளின் நடுவே கம்பரீ மாய் வடிவமைக்கப்பட்டுள்ளன,

குதிரையில் காணப்படும் வண்ணம் கருவேலம் பட்டையின் சாற்றில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது, குயில்கன் மற்றும் தேன்கூடு வடிவங்களை க் கொண்டு இச்சாலையின் பார்டர் மற்றும் முந்தானைப்பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன இதன் நிறங்கள் மல்பரி இலைகளை க் கொண்டு சாயம் இடப்பட்டுள்ளது.

கமலம் புட்டா சேலை

இயற்கை வண்ணங்களை கொண்டு கைத்தறியில் நெய்யப்பட்ட இந்த காஞ்சிபுரம் பட்டு புடவை தங்கநிற ஜரிகையை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு படைப்பு பொன்னிறத்தில் மின்னும் இந்த புடவையின் உடல்பாகம் கடுக்காயை கொண்டும் உடலெங்கும் படரும் கொடியின் நிறம்  மரப்பிசினை கொண்டும் சாயமிடப்பட்டுள்ளது, உடலில் காணப்படும் தாமரை மொட்டு தங்கநிற ஜரிகை கொண்டு நெய்யப்பட்டுள்ளது.பார்டரின் மெரூன் நிறம் மஞ்சிஸ்தாவை கொண்டு சாயமிடப்பட்டுள்ளது, பார்டரில் உள்ள ருத்திராக்ஷம் மற்றும் கோடுகள் தங்கநிற ஜரிகை யை கொண்டு நெய்யப்பட்டுள்ளது.

Comment here