World

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்

Rate this post

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் 3ம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பேசுகையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நம்பமுடியாத மைல் கல். அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் உள்பட 200 பேரால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி உள்ளார்.
எல்லைகளை தகர்த்தெறிந்து அவர் சாதித்திருக்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

l=1

Comment here