World

இத்தாலியில் முதல் பெண் பிரதமராக வெற்றி பெற்ற மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Rate this post

இத்தாலியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரியான ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சி வெற்றி அடைந்தது.

இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவர் இத்தாலியில் முதல் பெண் பிரதமராகியிருக்கிறார்.

இந்நிலையில், ஜியார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “தேர்தலில் பெற்ற வெற்றிக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். நமது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Comment here