India

இந்தியாவிற்கு எதிராக ஒலிக்கப்பட்ட ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம் – 41 பேர் கைது!

Rate this post

புனேவில் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமிட்டதால் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி சோதனையில் இறங்கியது.

இச்சோதனையின்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் 106 பேரை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

41 பேர் கைது

இந்நிலையில், நாடு முழுவதும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதையடுத்து, நேற்று புனேயில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் எதிர்ப்பு ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

என்ஐஏ சோதனையின்போது பல மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து, PFI உறுப்பினர்கள் புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே கூடினார்கள்.

பிறகு அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். PFI உறுப்பினர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், ‘அல்லாஹு அக்பர்’ மற்றும் ‘நாரா இ தக்பீர்’ போன்ற இஸ்லாமிய முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டவிரோதமாக கூடியிருந்ததாக 60-70 பேர் மீது புனே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Comment here