World

இந்தோனேசியாவில் பயங்கரம் – கால்பந்து போட்டியில் வன்முறை – 174 பேர் உயிரிழப்பு

3.7/5 - (4 votes)

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வன்முறையையடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதிக்கொண்டன.

இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அந்த அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டார்கள்.

ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் ரசிகர்கள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை கடுமையாக தாக்கினர்.

மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினார்கள்.

சில வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடித்தனர்.

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர்.

நீண்ட போராட்டத்துக்கு பின் வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் 129 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வன்முறையில் 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதில், மேலும் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

Comment here