World

இந்த வாரத்தில் மட்டும் 3 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா…!

Rate this post

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.

அந்த வகையில், அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல், கூட்டு ராணுவ பயிற்சிக்காக தென் கொரியாவுக்கு வந்தடைந்ததால் வடகொரியா மேலும் கோபமடைந்துள்ளது. இந்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியாவிற்கு வந்துவிட்டு, விமானம் மூலம் வீடு நாடு திரும்பிய பிறகு, இன்று மீண்டும் ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 3 முறை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Comment here