கதை

இனிய ஈசனே எல்லா பிறப்பும் பிறந்து களைந்தேன் எம் பெருமான் உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

Rate this post

நமசிவாய வாழ்க 🙏
சிவமே ஜெயம் சிவமே தவம்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம் ஈசனே.

திருவாசகம் – உயிருண்ணிப் பத்து.

பாடல் : 04. விளக்கம்.

பகலில் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமான், அடியேனைத் தானே எழுந்தருளி வந்து ஆண்டு கொண்டான்.

என்னுடைய என்பினது உள் துளைகளையும் உருகச் செய்து, மேலும் வந்து, என் மனத்தினுள்ளானாயினான்.

கண்ணிலும் உள்ளானாயினான். மற்றும் வாக்கினும் உள்ளானாயினான்.

பரந்த உலகத்தில் இவனைப் போல வினையைக் கெடுப்பவர் பிறரும் இருக்கின்றார்களோ? சொல்லுங்கள்.

ஆலவாயர் அருட் பணி மன்ற தந்தையே நமஸ்காரம்.

இனிய ஈசன் அருளுடன் ஈசனிடம் யாசகியின் அன்பான சிவ காலை வணக்கங்கள்.

Comment here