India

இமாசலப் பிரதேசத்தில் வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து – 7 பேர் பலி – ஜனாதிபதி இரங்கல்

Rate this post

இமாசலப் பிரதேசத்தில் வாகனம் கவிழ்ந்து உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து

இமாசல பிரதேசம், குல்லு மாவட்டம் அருகே பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில் நேற்று இரவு சுற்றுலா வாகனம் ஒன்று கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், ஊர்க்காவல்படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இமாசலப் பிரதேச மாநிலம் குலுவில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Comment here