Cinema

இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி… – நடிகர் விக்ரம்

Rate this post

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம்.

தற்போது இவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி உள்ளது.

இப்டத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக நடத்த விக்ரமினின் திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ”நன்றி.. தேங்க்ஸ்.. சுக்ரியா.. நன்னி.. தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி. பொன்னியின் செல்வன் – விக்ரம் நான் நிறைய படங்களில் நடித்திருக்கேன்; நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Comment here