வரலாறு

இராஜேந்திரனுடைய இராணுவச் சாதனைகள்

Rate this post

மாமன்னர் இராஜேந்திரனின்போர்ப்படைத்தளபதிகள் !

இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவர் .தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மாதண்ட நாயகனாக அமர்த்தப்பட்டார் . ‘பஞ்சவன் மாராயன்’ என்ற பட்டமும் இவருக்குக் கொடுக்கப்பட்டது. ‘

மும்முடிச் சோழனின் களிறு’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிரரையும் வென்றார் .
பின்பு மன்னனானதும் ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும், கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது.

இராஜேந்திரனுடைய இராணுவச் சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன.

திருவன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
தன்பெருந் தேவிய ராகி யின்புற…. என்று தொடரும் அவரின் மெய்கீர்த்தியில்

புகழொடு
பீடிய லிரட்ட பாடி யேழரை
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு
முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற்
சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்

என்று ராஜேந்திரன் பெற்ற சில வெற்றிகளை கூறுகிறது. அந்த மெய்கீர்த்தியை முழுவதும் எழுதி அதற்க்கு விளக்கம் எழுதினாலே ஒரு தனிப்புத்தகம் இராஜேந்திரப் பற்றி ஆகிவிடும் .

நாகர் மரபினர் எனவும் போகவதி புரத்தலைவர் எனவும் தம்மைக் கூறிக்கொண்ட ஓர் அரசர் வழி யினர், கி. பி. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டு களில் சக்கரக் கோட்டத்திலிருந்து அரசாண்டு கொண் டிருந்தனர். அவர்கள் தங்களை நாகர் மரபினர் என்று சொல்லிக்கொண்டதால் அவர் கள் அரசாண்ட நாடும் மாசுண தேசம் என்று வழங்கப் பெற்று வந்தது.
அதற்குச் சக்கரக்கோட்ட மண்டலம் என்னும் வேறொரு பெயரும் உண்டு. இராசேந்திரனுடைய படைத்தலைவனால் கைப்பற்றப்பட்ட மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி ஆகிய இடங்கள் அந்த வத்ச இராச்சியத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனவே, அவைகள் வேங்கி நாட்டிற்கு வடக்கே இருந்தன என்பது தெரிகிறது

பிறகு, அப்படைத்தலைவன் ஆதி நகரில் இந்திரரதன் என்பவனை வென்று ஒட்டர தேயத்தையும் கோசல நாட் டையும் பிடித்துக் கொண்டனன். அக் கோசலம், மகா கோசலம் என்று வழங்கும் தென்கோசல நாடாகும்சில கல்வெட்டுக்களில் நம் இராசேந்திரன் ‘ பூர்வதேசமுங் கங்கையுங் கடாரமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்’ என்று கூறப்படுகிறான். இதில் குறிப்பிடப்பெற்ற பூர்வ தேசம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள சட்டிஸ்கார் (Chattisgarh) பகுதியாகும். (Ep. Ind., Vol. IX, p. 283) அது பூர்வ ராஷ்டிரம் என்றும் முற்காலத்தில் வழங்கப் பெற்று வந்ததாம்.
அப் பூர்வதேசம் தென் கோசலத் தைச் சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

இவ்வாறு பல்வேறு நாடுகளை இங்கு , ,வேறு பல்வேறு நாடுகளை கடல் கடந்தும் வென்றதை மெய்க்கீர்த்தி முழுமையாக விவரிக்கிறது .
\

இத்தனை வெற்றிகளையும் சாத்தியம் ஆக்கிய ராஜராஜனின்திறமைமிக்க இராணுவத் தளபதிகளின் பெயர்களை ஒரு நூலில் கண்டேன் .அவைகளை இங்குதருகிறேன் .
விக்கிரமசோழ சோழியவராயனாகிய அரையன் இரரசராசன்

கிருஷ்ணன் இராமனான முன்முடி சோழ பிரம்மராயன்

மாராயன் அருள்மொழியனான உத்தம சோழ பிரம்மராயன்

ஈராயிரவன் பல்லவயனான உத்தம சோழப் பிரம்மராயன்

பாண்டியன் சீவல்லபன்
வல்லவராயன் வந்தியத்தேவன்
உத்தமசோழமிலாடுடையார்
கங்கைகொண்ட மிலாடுடையார்
க்ஷத்ரிய சிகாமணி கொங்காள்வான்
தண்ட நாயகன் அம்பிமைமையனாகிய –இராசேந்திர சோழப் பிரம்மராயன்

வீரராஜேந்திர பிரம்மாதிராஜன்
உத்தமசோழகோன்
உத்தமசோழப்பல்லவரராயன்
முடிகொண்ட சோழ விழுப்பரையன்
விக்கிரம சோழ சோழியவரையன்
இராஜராஜ பிரம்மராயன்
பாண்டி உதய திவாகரன் இராஜராஜ நல்லோருடையான்
நீலன் வெண்காடன் என்ற இராஜராஜ மூவேந்தவேளான்

சேனாதிபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளாண்
கொடும்பாளூர் இராஜேந்திர சோழ இருக்கு வேளார் சேனாதிபதி அரையன் கிடாரங்கொண்ட சோழன் –அணிமூரி நாடாழ்வான்

இரட்டைப்பாடிக்கொண்ட சோழ மூவேந்த வேளாண்

பார்த்திவேந்திர பிரும்மராயர்
மகாதேவன் வெண்காடான்
என்று மொத்தம் 67 பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது

.நான் முழுவதையும் எழுதவில்லை .நீண்டுவிடும் என்ற அச்சம் தான் காரணம் .

ஆனால் இத்தனை நீளப்பெயர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்ற வியப்பும் வருகிறது .இவைகள் பட்டப்பெயர்களாக இருக்கலாம் .

கூப்பிட வேறு சிறிய பெயர்கள் இருந்திருக்கலாம்

இவர்கள் அனைவரும் இராஜேந்திரன் வென்ற 33 நாடுகளுடன் நடந்த போர்களில் வெற்றிபெற பெரிதும் உதவியவர்கள் ஆவர் .

இந்த பெயர்கள் தமிழ் நாடு தொல்லியல் துறை வெளியிட்ட கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு எனும் 89 பக்கம் கொண்ட நூலில் தொகுக்கப்பட்டிருந்தது .
இதன் ஆசிரியர் முனைவர் இரா நாகசாமி அவர்கள் . வெளியீடு 2012

#அண்ணாமலைசுகுமாரன்

Comment here