India

இறங்கும்போது ரயில் இடையில் சிக்கிக் கொண்ட வாலிபர் – ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்

Rate this post

ஆந்திர மாநிலம், நந்தியாலிருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தார்கள்.

ரயிலில் ரவிக்குமார் (30) என்ற வாலிபர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தில் ரவிக்குமார் இறங்க வேண்டும். ஆனால் அவர் ரயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலிலிருந்து இறங்க முயற்சி செய்தார். அப்போது, இறங்கும்போது நிலை தடுமாறிய ரவிக்குமார் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். அப்போது வலியால் அவர் அலறி துடித்தார்.

இதைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்கள். இதனையடுத்து, உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.

பின்னர், ரயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comment here