World

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – போலீசார் தாக்குதலில் 31 பேர் பலி

Rate this post

கடந்த வாரம், 22 வயது மஹ்சா அமினி ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் விசாரணையில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் ஈரானின் பல இடங்களில் போராட்டட்ம வெடித்துள்ளது.

31 பேர் பலி

இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்க ஈரானிய பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்களில் 31 பேர் கொல்லப்பட்டனர் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் மனித உரிமைகள் (IHR) இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிய மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை அடைவதற்காக வீதிக்கு இறங்கி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ஆனால், அரசாங்கம் மக்களுக்கு தோட்டாக்களால் பதிலடி கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Comment here