World

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 17 பேர் பரிதாப பலி

Rate this post

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரி ஜியா நகரில் ரஷிய படைகள் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய சாலையில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் தரை மட்டமானதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார்.

Comment here