World

உக்ரைனை அழிப்பது எங்களது நோக்கம் கிடையாது – ரஷ்ய அதிபர் புதின்

Rate this post

அஸ்தானா, உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இப்போருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

உக்ரைனிலிருந்து வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற ரஷியா-மத்திய ஆசிய நாடுகள் இடையிலான மாநாட்டில், ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், ரஷியாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதினால், அது உலகளாவிய பேரழிவிற்கு வழி வகுக்கும்.

அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்.

உக்ரைனை அழிப்பது ரஷியாவின் நோக்கம் அல்ல. உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை. உக்ரைன் படையெடுப்பில் ரஷியா எல்லாவற்றையும் சரியாகவே செய்து வருகிறது என்றார்.

Comment here