உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள அவசர சட்டம், சட்ட மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை தோற்கடிக்க வேண்டும்.

மக்களவையில் நிறைவேறும் என்றாலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அந்த மசோதாவை தோற்கடிக்க முடியும்; இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம்

பாஜக அல்லாத மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள் எங்களுக்கு நல்ல ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்; அது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது

– டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்