India

உத்தரகாண்ட் பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

4/5 - (2 votes)

உத்தரகாண்ட் பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது.

மலைச்சிகரத்தின் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து முகாமிற்கு மலையேறும் பயிற்சியாளர்கள் 41 பேர் திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டார்கள்.

தகவல் அறிந்ததும் இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் சிக்கியவர்களை மீட்க பணியில் களமி
இறங்கினர்.

பனிச்சரிவில் சிக்கிய பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “உத்தர்காசியில் மலையேற்ற வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம் என்பது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மீட்புப் பணிகளை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Comment here