World

எகிப்தில் சுமார் 2600 ஆண்டுகள் பழமையான “சீஸ்” கண்டுபிடிப்பு – ஆராச்சியாளர்கள் மகிழ்ச்சி

Rate this post

நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் மற்றும் அவர்களின் நாகரிகங்களை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 2600 ஆண்டுகள் பழமையான பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய “சீஸ்”-ஐ தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், சுமார் கிமு 688 மற்றும் 525 இடைப்பட்டதாக காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட “சீஸ்” எனப்படும் பாலாடைக்கட்டியை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சீஸ் ஆனது செம்மறி ஆட்டு பாலிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Comment here