Tamilnadu

எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் – 70-க்கும் மேற்பட்டோர் கைது

Rate this post

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து மன்னார்குடியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவினரை சட்டசபையில் பேச  அனுமதிக்காததை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு   போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.  

தடையை மீறி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிஉள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள்  கருப்பு சட்டை அணிந்துஉண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை  காவல்துறையினர்கைது செய்தனர்.

இந்த கைதை கண்டித்து திருவாரூர்மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து 70-க்கும் மேற்பட்டோர் பேரணியாக திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி  பேருந்து நிலையத்தின் முன்பு   அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஊர்வலமாக சென்று மன்னார்குடி தேரடியில் கண்டன முழக்கம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக  மாவட்ட ஒன்றிய  நகர  
நிர்வாகிகள் பலர் இதில் கலந்து  கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மன்னார்குடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Comment here