ஆயுர்வேதம்

எதிராக நோய் எதிர்ப்பு சக்தி

Rate this post

மூலிகைகள் !

இதுவரை சில மூலிகைகளைப் பற்றி இன்றைய மூலிகை எனும் தொடராக நான் 2009 இல் எழுதி வெளியிட்டதைத் தேடி முகநூலில் மீள் பதிவு செய்தேன்

இதில் கிராம்பு .ஆடாதோடை ,குப்பைமேனி தும்பை ,தூதுவளை போன்ற பலமூலிகைகள் இடம் பெற்றிருந்தது .இவைகள் அத்தைனையிலும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது

அது இவை அத்தனையும் இப்போதைய பெருந்தொற்றிற்கு \எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் தன்மையுடையது .இது ஒரு பொதுவான தன்மை .இது குறித்து பல ஆங்கில ஆய்வேடுகள் இருக்கின்றன .

எனது சிறுவயதில்(10 ) எங்களது வீட்டில் தினமணி செய்தித்தாள் தான் வரும் அதில் அப்போது வெளிவரும் அதன் ஆசிரியர் ஏ என் சிவராமன் அவர்கள் எழுதிய கணக்கன் கட்டுரைகள் எனும் பொருளாதாரக்கட்டுரைகள் ,,
அரைகுறை பாமரன் எனும் பெயரில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகள் மற்றும்
வேலூர் திரு கண்ணப்பர் எழுதிய மூலிகை கட்டுரைகள்என்னைக்கவர்ந்தவை

அப்போது எனக்கு 10 வயது இருக்கும் அதுமுதல் என்னை தமிழ் நாட்டு மூலிகைகள் எனக்கு அறிமுகம் ஆனது .
பிறகு திரு கண்ணப்பர் அவர்கள் மிக்க சிரமத்துடன் மூலிகை மணி என்று ஒரு பத்திரிக்கைத் தொடங்கினார் .அதையும் முதலில் இருந்து வாங்கத்தொடங்கினேன் . அதில் அப்போது பல மூலிகைகளைப்பற்றி வெளிப்படையாக ஒளிவுமறைவு இன்று வெளியிட்டார் .

அவைகளைத்தொகுத்து நம் நாட்டு மூலிகைகள் என்றும் டபுத்தகங்கள் வெளியிட்டார் அவரது மறைவுக்குப்பின் அவரது மகன் மரு .வெங்கடேசன் தொடர்ந்து மூலிகை மணியை சிறப்புடன் இன்றுவரை நடத்திக்கொண்டிருக்கிறார் .

திரு கண்ணப்பர் எழுதத்தொடங்கிய காலத்தில் தமிழ் மக்கள் மூலிகைகளை மொத்தமாக மறைந்திருந்தார் .அவரது எழுத்துக்கள் அக்கால மக்களை உசுப்பி எழ வைத்தது எனலாம்

.எனது தற்போதைய தமிழ் மருத்துவ ஈடுபாட்டிற்கு திரு கண்ணப்பர் மற்றும் அவரின் புத்தகங்கலேக்காரணம் எனலாம் .
பிறகு பல ஆயிரம் மருத்துவ புத்தகங்களைக்காண ,,சிலவற்றைப்படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் எனக்கு திரு கண்ணப்பர் மறக்க இயலாதவர் .

நான் கண்டவற்றில் நீதிபதி பலராமய்யா ,வீரமாமுனிவர் ,அப்துல்லா சாஹேப் ,கண்ணுசாமி கவள்ளல் பெருமானார் போன்ற சிலரின் புத்தகங்கள் என்னைக்கவர்ந்தவை .வெளிப்டையானவை .

வீரமாமுனிவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது. இந்நூல்கள் பாடல் வடிவில் உள்ளன.
நசகாண்டம்
நவரத்தின சுருக்க மாலை
மகா வீாிய சிந்தாமணிவைதிய சிந்தாமணி
சுரமஞ்சாி
பூவரசங்காய் எண்ணெய்
மேகநாதத்தைலம் கலிவெண்பா
பஞ்சாட்சர மூலிஎண்ணெய்(ஆனந்தகளிப்பு)
சத்துருசங்கார எண்ணெய்(நொண்டிச் சிந்து)

வீரமெழுகுமுப்புசூத்திரம்(நொண்டிச் சிந்து)
அனுபோகவைத்திய சிகாமணி
வீாிய சிந்தாமணி இரண்டாம் பாகம்
குணவாடகம்
நிலக்கண்ணடாடி போன்றவை

இன்னமும் சொல்ல சிறந்த புத்தகம் எழுதிய பல நூறு வைத்தியர்கள் இருக்கிறார்கள் ,அத்தனை போரையும் சொல்ல வில்லை என்றாலும் வணங்குகிறேன் .

சொல்லப்போனால் எனது தாத்தாவே ஒரு சிறந்த மருத்துவர் .பரங்கிப்பேட்டையில் அவர் மிகுந்த புகழுடன் இருந்தார் .

ஆனாலும் இத்தகைய சிறந்த மூலிகைகள் தற்போது இதில் சொல்லப்பட்டமாதிரி செயல்;படவில்லையே என்ற குறை பலரிடம் இருக்கிறது .
இந்த மூலிகைகளின் தன்மைகளைப்பற்றி தமிழ் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு சொல்லிச் சென்றுள்ளனர் .
ஆனால் அப்போது இருந்த நிலத்தின் தன்மை இப்போதும் இருக்கிறதா ?
முக்கியமாக கடந்த 100 ஆண்டுகளில் நிலம் அதன் வளத்தை இழந்து ,அதில் இடப்பட்ட செயற்கை உரங்கலாளும் ,பூச்சிமருந்துகளாலும் நிலமும் மிக்க மாசடைந்துவிட்டது
.இந்த தருணத்தில் சொல்லபட்டது மாதிரி மூலிகைகளின் தன்மை எப்படி இருக்கும்
.இப்போது ஒரு திருத்தம் சீர்திருத்தம் ,தற்போதைய சூழலுக்கு ஏற்ப அனுபவமுள்ள கற்றறிந்த சித்தமருத்துவர்கள் செய்யவேண்டும் .
அத்துடன் அனுபானம் ,சுத்தி செய்தல் முதலியன முக்கியமானவை .
விரைவில் இத்தகைய நல்ல சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று நம்புவோம் .!

இன்றைய மூலிகை என்று 49 கட்டுரைகள் எழுதி இருந்தேன் .இந்தக்கட்டுரைகள் ஒரு அறிமுகம் தானேத தவிர இதை வைத்தியக் கட்டுரைகள் அல்ல .

தக்க மருத்துவரை அணுகி ஆலோசனைப்பெற்று பயன்படுத்துங்கள் .அடுத்து அபூர்வ மூலிகைகள் என்ற பெயரில் வெளிவந்த 50 தாவது கட்டுரையை நாளை பதிவிடுகிறேன் .
நன்றி !
#அண்ணாமலைசுகுமாரன்

Comment here