Cinema

என் குழந்தை சில மணிநேரம் தான் உயிரோடு இருக்கும் என்று சொன்னார்கள்…. – பிரபல நடிகை பேட்டி

Rate this post

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கன்னிகா. இவர் அஜித்திற்கு ஜோடியாக “வரலாறு” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனையடுத்து, ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் கன்னிகா. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை கன்னிகா பேட்டி

இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு நடிகை கன்னிகா பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “நான் கர்ப்பமாக இருந்தபோது, குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அனைத்து ஆரோக்கியமான விஷியங்களையும் செய்து வந்தேன்.

மருத்துவர்களும் குழந்தை நன்றாகவே இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் எனக்கு குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. உங்கள் சில மணி நேரம் தான் உயிரோடு இருப்பார் என்ற தெரிவித்தனர். என் வாழ்க்கையே எனக்கு இருண்டுவிட்டது. அதன்பின் எப்படியோ போராடி குழந்தையை காப்பாற்றி விட்டேன் என்று தெரிவித்தார்.

Comment here