Game

என் வாழ்க்கையில் மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் – விராட் கோலி பேட்டி

Rate this post

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்தது.

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

இறுதியில், இந்தியா 20 ஓவரில் 160 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு விராட் கோலி பேசுகையில் –

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியே என் வாழ்க்கையின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்.

தற்போது பேசுவதற்கு சத்தியமாக என்னிடம் வார்த்தைகள் இல்லை.

நான் வார்த்தைகளை இழந்தவனாக இருந்தேன்.

நீங்கள் தொடர்ந்து என்னை ஆதரித்தீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

Comment here