politics

ஒன்றிய அரசு இந்தி மொழியை மாநிலங்களில் திணிப்பதை கண்டித்து

Rate this post

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கடலூர் மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மைய குழு கூட்டம் 13 4 2022 அன்று மாலை கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி சிஜி நினைவகத்தில் நினைவகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

ஒன்றிய அரசு இந்தி மொழியை மாநிலங்களில் திணிப்பதை கண்டித்தும் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை புகுத்தி தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்க வகை செய்வதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 19 அன்று தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடைபெறுகிறது

கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

கடலூர் ஜவான் பவன் அருகில் ஏப்ரல் 19 அன்று காலை நடைபெறும் கண்டன இயக்கத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்

 

 

Comment here