மருத்துவம்

ஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது

Rate this post

அபூர்வமூலிகைகள் எனதுஅபூர்வமூலிகைகள்எனும் பதிவில் சிலர் சில ஐயங்களை எழுப்பியிருந்தனர் .
அவைகளுக்கு அளிக்கும் பதில் அனைவருக்கும் பயன்படும் என்று அவைகளைத் தனிப்பதிவாகவே இடுகிறேன்

.Vijayraghava Sharma எனும் நண்பர்
//இந்த நத்தை சூரி செடி நத்தையின் கூட்டில் பட்டால் அந்த நத்தை கூடு வெடிக்கும் என்பார்களே உண்மையா ஐயா – தாங்கள் அதை நேரில் பார்த்ததுண்டா? //என்று கேட்டிருந்தார்

நத்தைச் சூரியின் பல செடிகளை ஒரு பையில் இட்டு அதில் ஒரு நத்தையை போட்டு சில மணிகள் வைத்திருந்தால் ,அந்த நத்தையின் ஓடு கழண்டுபோவதைக்கண்டிருக்கிறேன் .ஆனால் ஒரு செடி போறாது பல செடிகள் ,ஒருமணிநேரமாவது தேவைப்படுகிறது .இதுவே இப்போதைய மூலிகைகள் அதன் வீரியத்தை இழந்து வருவதற்கு சான்று எனநினைக்கறேன் .ஓடு வெடிப்பதில்லை ,ஆனால் ஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது அதை நானெப்பார்த்திருக்கிறேன்

Kaja Mydeen எனும் நண்பர்

//ஐயா வெற்றிலையிலிருந்து ரசம்பிரித்தல் என்றொரு மரபுக்குறிப்பைச்சொல்லியுள்ளீர்கள். அதன் செய்முறையையும் தெரிவித்தால் உபயோகமாய் இருக்கும்// என்று வினவியிருந்தார் .

சேலம் சட்டக்கல்லூரி அருகில் ஏற்காடு போகும் சாலையில் சித்தர் மாயம்மா சமாதி அருகில் தவசி அடிகள் என்று ஒரு யோகி மற்றும் வைத்தியர் இருக்கிறார் .அவர் எனக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்த செய்தியைக்கூறி செய்தும் காட்டினார் .அப்போது எனக்கு வயது 40 தான் இருக்கும் ,அப்போது இத்தகைய ஆர்வம் இல்லாததால் அதைக்கற்றுய்க்கொள்ளவில்லை .
சமீபத்தில் 92 வயதில் மறைந்த முப்பு ஆய்வாளர் முத்துசாமி அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார் .அவர் முப்பு ஆய்வில் சுமார் 60 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார் .அவர் எனக்கு தேங்காய் ஓட்டில் இருந்து வெள்ளீயத்தை பிரித்து காண்பித்து இருக்கிறார் அதன் மாதிரி கூட என்னிடம் சில காலம் இருந்தது .இவாறு மூலிகைகளை பயன்படுத்தி பல உலோகங்களைப்பிரித்தெடுக்கும் முறைகள் செய்பர்களை காணும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது .
அவரிடமும் நான் கற்றுக்கொள்ளவில்லை ,

ஆனால் அவர் வைத்திருந்த புத்தகங்கள் ,ஓலைச் சுவடிகள் ,முடிக்காத மருந்துகள் ,முடித்த மருந்துகள் என அத்தனையும் என்னிடம் தான் தந்துவிட்டு சென்றார் .அவரின் அன்பு அளப்பரியது .அவருக்காகவாவது நான் முப்பு ஆய்வில் வெற்றிபெறவேண்டும் .

கற்றுக்கொள்ளவிலையேத்தவிர இன்னமும் என்னிடம் எதையும் செய்யும் வல்லுனர்களும் ,அதற்குரிய நூல்களும் உள்ளன .விரைவில் சாதிப்பே ண் என்ற நம்பிக்கை உள்ளது .

இறையருள் சித்தர்கள் துணை நிச்சியம் கிடைக்கும் என நம்புகிறேன் .
இன்னமும் உயிர் நத்தைகளை பொறுக்கி எடுத்து அவைகளை நத்தைச் சூரி செடியுடன் இட்டு ஓடுகளை இலகுவாக பிரித்து உண்ணும் வழக்கம் இருந்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் .

மீன்களை பிடிப்பதற்குக்கூட சில ஆண்டுகளுக்கு முன்வரை சில மூலிகளைகளை மொத்தமாகக்கட்டி கடலில் இட்டால் மீன்கள் மயங்கி அதிகம் கிடைத்திருக்கிறது என சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன் .பெருவாரியாக கிடைக்கும் கார்த்திகை கோலா எனும் மீன் கூட்டத்தைக்கூட சில மூலிகைகளைப்பயன்படுத்தி ,கூட்டம் கூட்டமாக பிடித்திருக்கிறார்கள் .இதுகுறித்து அதிக செய்திகளை நண்பர் John Milton Fernando அவர்கள் கூறினால் தெரிந்து கொள்ளலாம் .

மீனவர்களிடம் இன்னமும் பல் வேறு மூலிகை இரகசியங்கள் உண்டு .கடலிலும் வாழும் தாவரங்கள் மிகுதியாக உண்டுநிலத்தைப்போல் 3 மடங்கு கொண்ட கடலில் பல மருத்துவ குணம் கொண்ட செடிகள் மரங்கள் உண்டு . .ஒவ்வொரு மீனுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள் உண்டு .

மருந்து ஏதும் இல்லாமல் மீன்களை உண்டே பல நோய்களை அவர்கள் போக்கிக்கொள்வார்கள் பத்திய மீன்கள் என்றே ஒரு வகை மருத்துவகுணம் கொண்ட மீன்கள் உண்டு

எத்தனையோ தொல் தமிழர்களின் மரபு சார்ந்த அறிவியலை நமது அலட்சியம் காரணமாக இழந்து வருகிறோம் என்பதுதான் வேதனை !
#அண்ணாமலைசுகுமாரன்

Comment here