Cinema

ஓட்டலில் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி

Rate this post

ஓட்டலில் பிரபல நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான சியா என்ற படத்தில் நடித்திருந்தவர் அகன்ஷா மோகன் (30).

இவர் மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் 9 திருடர்கள் என்ற படத்தில் நடித்துள்ள இவர் சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், மும்பை அந்தேரியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் நேற்று தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Comment here