Cinema

ஓம் என் அறைக்கு வா…! ஆதிபுருஷ் டைரக்டர் மீது கோபமாக கூப்பிட்ட பிரபாஸ்

Rate this post

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான வலம் வருபவர் பிரபாஸ்.

இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்போது பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடந்தது.

இவ்விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஆதிபுருஷ் பட டீசரில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அனுமன் குறித்த சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டாலும் படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதற்கிடையில் கோபத்தில் இயக்குனர் ஓம் ரவுத்தை அவர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வின் வீடியோவில் டீசர் வெளியானதும், கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்த்த பிரபாஸ் இயக்குனரிடம் கோபமடைந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த வீடியோவில் பிரபாஸ் கோபமாக ஓம் என் அறைக்கு வா என்று சொல்கிறார். பிரபாஸின் முகத்தில் கோபம் தெரிகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் பிரபாஸை இவ்வளவு கோபமாக பார்த்ததில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comment here