கல்வி

ஔவையின் குறள் -13

Rate this post

 

அதிகாரம் 2 =உடம்பின் பயன்

7) ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும்
நேசத்தால் ஆய உடம்பு

இந்தக்குறளில் நேசத்தால் ஆய உடம்பு ,ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும் என்கிறார்
நேசத்தால் ஆய உடம்பு என்றால் என்ன ?

நேசம் என்பதுஎன்ன என்பது அனைவரும் அறிந்ததே ,
நான் உலகத்தையே நேசிக்கிறேன் ,இந்த உலகத்தில் தான் என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை என புலம்புகிறீர்களா ?
உங்களை யார் உலகத்தை நேசிக்கச்சொன்னது ?
முதலில் உங்களை முழுமையாக நேசியுங்கள்
உங்களை அறியுங்கள் .,
பிறகு உங்களுக்கு அருகில் உள்ளவர்களை , உங்கள் அடுத்த வீட்டுக்காரை நேசியுங்கள் . இப்படியே அன்பு விரியட்டும்
இப்போது அன்பு செய்வது எப்படி என்றுதெரிந்துவிடும் .

அன்பு என்பது எதையும் எதிர்ப்பார்த்து செய்வதில்லை .அன்பு ஒரு அற்புதமான உணர்வு !
நீங்கள் வெளியேஅன்பை கொடுக்க கொடுக்க ,உங்களுக்கும் ஜீவ சக்தி பெருகிவரும் .
உண்மையில் வெளியே கொடுப்பது என்பது உங்களுக்கு நீங்களே கொடுப்பதுதான் என்பது புரியும்
உடம்பே அன்பு மயமாகும் .
அன்பே சிவம் என்று திருமூலர் ஏன் சொன்னார் என்பது புரிந்துவிடும்

அன்பே உருவாக உடம்பு அமைந்தால் அனைத்தும் கிடைக்குமா ?அத்தகைய உடம்பு அமைத்தால் ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும் என்கிறார் ஒவையார் .
ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருவையாறு திருத்தாண்டகம் தேவாரத் திருப்பதிகதில்.
எனவே ஓசை என்பதும் பரம்பொருளின் ஒரு வடிவு என்பது புரிகிறது

அது என்ன ஓசை என்று ஞானம் தெரிவிக்கும்
நாத பிந்து கலாநிதி என்கிறார் அருணகிறார் .
இந்த பிரபஞ்சமே நாததால் உருவானது .

அடுத்து உணர்வு என்பது என்ன ?
உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.
மெய்யில் படுவது மெய்ப்பாடு.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பதுஇயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல்.பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல்
முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள்.

சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் – ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.
ஆயினும் ஒவையார் கூறும் உணர்வு ,மெய்யுணர்வு எனும் தன்னை அறிதல் ஆகும் அது உடல் அன்பு மயமானால் தானே அமையும் என்கிறார் .என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன்

#அண்ணாமலைசுகுமாரன்

 

Comment here