Tamilnadu

கடலூர் மாவட்டத்தில் முன்விரோதத்தால் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…!

Rate this post

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிறுவம்பர் கிராமத்தை சேர்ந்த மஞ்முத்து என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது

இந்நிலையில் மஞ்சமுத்து என்பவரை கடந்த 25.12.2018ம் தேதி ராமலிங்கம் என்பவர் மஞ்ச முத்துவை அடித்து தாக்கப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மஞ்ச முத்து உயிரிழந்தார்.

இந்த வழக்கானது விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது‌.

இந்நிலையில் இன்று நீதியரசர் பிரபா சந்திரன் குற்றம் சாட்டப்பட்ட ராமலிங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியானது.

இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார்.

Comment here