Game

கடைசி டி20 போட்டி: இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

Rate this post

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றிருக்கிறது.

முதல் இரு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்து விட்டது.

இந்லையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடந்ததூ.

இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றியுடன் டி20 தொடரை நிறைவு செய்துள்ளது.

இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடக்க உள்ளது.

Comment here