இல்லறம்

கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் நீங்க

Rate this post

பணத்தால் குடும்ப உறவுகளுக்குள் பிரச்சினை ஏற்படுகிறதா அப்படின்னா எலுமிச்சை பழத்தை இப்படி செய்து விடுங்க சரியாகிவிடும்

ஒரு குடும்பத்தில் எந்த விஷயத்திற்காக சண்டை நடந்தாலும் பரவாயில்லை ஆனால் சந்தேகம் மற்றும் பண பிரச்சனையால் வரும் சண்டைகள் அவ்வளவு எளிதாக தீர்வதில்லை கணவன் மனைவிக்குள் இருக்கும் சந்தேகம் அந்த உறவினை நிலைகுலைய செய்துவிடும் அதே போல பணத்தால் ஏற்படும் பிரச்சனையும் குடும்ப உறவுகளை ஆளுக்கொரு திசையாக பிரித்து போகச் செய்துவிடும் இப்படி பணம் மூலம் வரும் குடும்ப சிக்கல்களை தீர்ப்பதற்கு உரிய எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்

கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு நம்பிக்கை நம்பிக்கை இல்லாத எந்த ஒரு உறவும் நிலைப்பதில்லை அதிலும் குறிப்பாக கணவன் மனைவி என்கிற புனிதமான பந்தத்திற்குள் நம்பிக்கை இல்லை என்றால் அந்த உறவில் அர்த்தமில்லாமல் போய்விடும் அபாயம் உண்டு சிறுக சிறுக சேரும் கோபமானது நாளடைவில் வெறுப்பாக மாறி தீராத விரக்தியை உண்டு பண்ணி விடும்

அதே போல பணத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் குடும்ப உறவுகளுக்குள் சிக்கல்களை அதிகமாக ஏற்படுத்தும் சொத்து தகராறு பாகப்பிரிவினை பற்றிய கதைகளில் எல்லாம் கொலை செய்யும் அளவிற்கு துணியும் மக்களை நாம் கண்டதுண்டு பெற்றெடுத்த தந்தையை கொலை செய்த மகன் உடன் பிறந்த சகோதரனை கொன்ற தம்பி என்று எத்தனையோ கதைகள் பண பிரச்சனையால் நிகழ்ந்தது உண்டு

கடன் அன்பை முறிக்கும் என்பது போல பணப்பிரச்சனை உறவை முறிக்கும் நல்ல உறவைப் பேணி காக்க கூடுமானவரை கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது உடன் பிறந்த ரத்த பந்தமாக இருந்தாலும் சரி நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி வாங்கிய பணத்தை நேர்மையாக அவர்கள் கேட்கும் முன்பே கொடுத்து விடுவது அந்த உறவுக்கு மேலும் வலு சேர்க்கும் அப்படி அல்லாமல் பணத்தால் பிரச்சனை வந்தால் அது எந்த அளவிற்கு அது உங்களை கொண்டு செல்லும் என்பதை யூகித்து கூட சொல்ல முடியாது

கஷ்டப்பட்டு தான் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிக்கின்றனர் நம் பணத்தை நாம் பறி கொடுக்கும் பொழுது வரும் கோபமானது தான் மற்றவர்களுக்கும் வரும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் இப்படி குடும்பத்தில் பணத்தால் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நல்ல ஒரு எளிய பரிகாரம் உண்டு அம்பாள் கோவில்களில் பொதுவாக பிரகாரத்தின் வெளிப்புறம் சூலாயுதம் நிச்சயமாக இருக்கும் சூலத்தை 1 முதல் 3 5 என்று நிறைய எண்ணிக்கையில் குத்தப்பட்டு இருக்கும். அது ஒவ்வொரு கோவில்களுக்கு உட்பட்ட விதிமுறையாகும்

அப்படி இருக்கும் சூலாயுதங்களில் நாம் எலுமிச்சைப் பழங்களைச் செருகி வைப்பது நம் வேண்டுதல்களை பலிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை அந்த வகையில் தீராத பண பிரச்சனையை தீர்க்கவும் பணத்தால் வரும் சண்டை சச்சரவுகள் அகலவும் பண ரீதியான பிரச்சினையில் வழக்கு போன்றவற்றில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களும் இந்த பரிகாரம் செய்ய நல்ல ஒரு தீர்வை கொடுக்கும் மூன்று அல்லது ஒன்பது என்கிற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்

அதை அந்த கோவில்களுக்கு சென்று ஒரு சூலாயுதத்தில் மூன்று அல்லது மூன்று சூலாயுதத்தில் ஒன்பது என்கிற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை பலி கொடுத்து உங்களுடைய பிரச்சனைகள் தீர மனமார வேண்டிக் கொண்டால் போதும் பணத்தால் வந்த எத்தனையோ பிரச்சினைகளும் வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் உறவுகளுக்குள் நல்ல ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு ஒற்றுமை பலப்படும் பிரச்சனைக்கு உரியவர்கள் இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து அனைவரும் பயனடையலாமே
-அன்புடன் திருமலை

Comment here