Tamilnadu

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு – கைதான 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..!

Rate this post

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்த 12-ம் வகுப்பு மனைவி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார்.

மாணவியின் மரண வழக்கில் 2 ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த்தனர்.

இதையடுத்து மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் நீதிபதி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டார்.

Comment here