மாவட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்

Rate this post

காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஐக்கிய சங்கம் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி வளாகத்தில் துப்புரவு ஊழியர்கள் ஐக்கிய சங்கம் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது திருமாதாசன் மற்றும் தம்பிதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அன்னதானமும் வழங்கினர் இதில் இளைஞரணி யுவராஜ் மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்துரு ஐக்கிய சங்க தலைவர் சரவணன் மாவட்டத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட துப்புரவு ஊழியர்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் மேலும் சிறப்பு அழைப்பாளர் களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Comment here