மாவட்டம்

காஞ்சிபுரம், ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் துரியன் படுகளம் விழா

Rate this post

காஞ்சிபுரம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் துரியன் படுகளம் விழா விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் பேரருளை பெற்று சென்றனர்.

சின்ன காஞ்சிபுரம் கோகுலம் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகாபாரத அக்னி வசந்த விழா மற்றும் தீமிதி விழா கடந்த 6ஆம் தேதி துவங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாளான இன்று காலை துரியன் படுகளம் விழா விமர்சையாக நடைபெற்றது முத்து ராஜகுல வம்சத்தினரால் நடத்தப்படும் விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்று சென்றனர் இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ். முன்னாள் நகரமன்ற உறுப்பினர் டி.பி. சீனிவாசன் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் உள்ளிட்ட முத்து ராஜகுல வம்சத்தினர் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நீர்மோர் உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Comment here