India

காபூலில் தாஷ்ட்-இ-பார்ச்சி தற்கொலைப்படை தாக்குதல் – 20 பேர் பலி -இந்தியா கடும் கண்டனம்

Rate this post

காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஜ் கல்வி மையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என்று காபூலிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

அந்த பதிவில்,

காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் நேற்றைய பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் வருத்தமடைகிறோம். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம். கல்வி இடங்களில் அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Comment here