Tamilnadu

காரமாங்குடியில் புதிய கட்டிடம் திறப்பு விழா – நடுரோட்டில் அமைச்சர்கள் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல்

Rate this post

காரமாங்குடியில் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் நடுரோட்டில் அமைச்சர்கள் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம்,விருத்தாச்சலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை திறப்பதற்காக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் வருகை தந்தனர்.

திமுக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்கள், கார்மங்குடி கிராமத்தில் நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டதால், அவ்வழியாக 13 கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் கார்மாங்குடி கிராமத்தை, கடந்து செல்ல முடியாமல் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரமாக கடும் அவதி அடைந்தனர்.

நிகழ்ச்சி முடிந்து திமுக அமைச்சர்கள் சென்ற பின்பு அரசு பேருந்துகள் கிராமத்தை நோக்கி சென்றன.

திமுக அமைச்சர்கள் தங்களது வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருந்ததால் அரசு பேருந்துகள் கிராமத்திற்குள் செல்லாமல் பாதி வழியில், நிறுத்தி வைத்திருந்தது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Comment here