இல்லறம்

காவாய் கனகத் திரளே போற்றி

Rate this post

*திருச்சிற்றம்பலம்*

*அருள்தரும் திருஆலவாய் அங்கயற்கண்ணி அம்மை உடனுறை அருள்மிகு திருஆலவாய் சொக்கநாதாப் பெருமான் திருமலரடிகள் போற்றி போற்றி!!*

*ஹரஹர நமப் பார்வதிபதயே!!*
*ஹரஹர மகாதேவா!!*

*தென்னாடுடைய சிவனே போற்றி!!*
*என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!*

*ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!*
*பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!*

*தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!*
*இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!*

*ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!*
*சீரார் திருவையாறா போற்றி!!*

*அண்ணாமலை மலை எம் அண்ணா போற்றி!!*
*கண்ணார் அமுதக் கடலே போற்றி!!*

*பராய்த்துறை மேவி பரனே போற்றி!!*
*சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!!*

*ஆடக மதுரை அரசே போற்றி!!*
*கூடல் இலங்கு குருமணி போற்றி!!*

*சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி!!*
*ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!!*

*காவாய்கனகத் திரளே போற்றி!!!*
*கயிலை மலையானே போற்றி போற்றி !!!*

*பெருமான் திருவடிக்கு தேவாரம்*

*பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்*
*நினைப்ப வர்மனங்* *கோயிலாக் கொண்டவன்-அனைத்தும்* *வேடமாம் அம்பலக் கூத்தனைத்*
*தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.*

*பெருமான் திருவடிக்கு திருவாசம் எனும் தேன்*

*கடையவ னேனைக் கருணையி னாற்கலந்* *தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்* *வேங்கையின்தோல்*
*உடையவ னேமன்னும் உத்தர கோசமங்*
*கைக்கரசே சடையவ னேதளர்ந்* *தேன்எம்பி ரான்என்னைத்* *தாங்கிக்கொள்ள*

*பெருமான் திருவடிக்கு திருவிசைப்பா*

*அம்பலத் தருநட மாடவேயும் யாதுகொல்* *விளைவதென் றஞ்சி நெஞ்சம்*
*உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே*
*ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்*
*வன்பல படையுடைப் பூதஞ் சூழ*
*வானவர் கணங்களை மாற்றி யாங்கே*
*என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்*
*எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே*

*பெருமான் திருவடிக்கு திருப்பல்லாண்டு*

*சேவிக்க வந்தயன் இந்திரன்* *செங்கண்மால் எங்குந் திசைதிசையன*
*கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று* *கூத்தாடும் ஆவிக்* *கமுதைஎன் ஆர்வத்* *தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும்* *பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.*

*பெருமான் திருவடிக்கு பெரியபுராணம்*

*மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங் கழிப்பாலை மருங்கு நீங்கி*
*நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில்*
*நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும்*
*அம்பலத்து நிருத்த னாரைத்*
*தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ*
*எனப்பாடித் தில்லை சார்ந்தார்*

*தென்னாடுடைய சிவனே போற்றி!!*
*என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!*

*ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!*
*பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!*

*தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!*
*இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!*

*காவாய் கனகத் திரளே போற்றி!!* *கயிலைமலையானே போற்றி போற்றி!!*

*அருள்தரும் திருஆலவாய் அங்கயற்கண்ணி அம்மை உடனுறை அருள்மிகு திருஆலவாய் சொக்கநாதாப் பெருமான் திருமலரடிகள் போற்றி போற்றி!!*

*தில்லையம்பலம்*

*சர்வம் சிவார்பணம்*

Comment here