World

கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு

Rate this post

கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பு பொறுப்பேற்கவில்லை.

ரஷியாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷிய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ஆனது ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது.

இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில், ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒரு லாரியில் வெடிபொருட்களை நிரப்பி அதை வெடிக்க செய்துள்ளனர்.

இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் வெடிவிபத்தில் பலியாகினர்.

எரிபொருள் நிரப்பப்பட்ட 7 ரெயில் பெட்டிகள் தீப்பிடித்தது.

இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

Comment here