World

கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பரிதாப பலி

Rate this post

துருக்கியிலிருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர்.

அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியுள்ளது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினர். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர்.

இது குறித்து கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் 30 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Comment here