Tamilnadu

குடகனாற்றில் குளித்த தந்தை, மகள் உள்பட 3 பேர் பரிதாப பலி…!

Rate this post

கரூர் மாவட்டம் பண்ணப்பட்டி குடகனாற்றில் குளித்த தந்தை, மகள் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஷேக் பரீத் (40). இவர் தன் மகள் மவுபியா(12) மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள்‌ அனைவரும் இன்று காலை அம்மாபட்டி கோரிதோட்டம் பகுதியில் உள்ள தர்காவிற்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.

பின்னர், அனைரும் பண்ணப்பட்டி குடகனாற்றுக்கு சென்று குளித்தனர்.

அப்போது, சிறுமி மவுபியா(12) எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த ஷேக் பரீத் மற்றும் அவரது உறவினர் ரியாஜுதீன் ஆகியோர் அவரை காப்பற்ற முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி தேடினர்.

இதனை அடுத்து போலீசார், 3 உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Comment here