வேலை வாய்ப்பு

குரூப் 4: விண்ணப்பிக்க ஏப்ரல் 28 கடைசி நாள்!

Rate this post

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின்கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலிப் பணியிடங்கள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி, இப்பணிக்கு 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து வருகின்றனர். இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதியே கடைசியாக இருப்பதால், இன்னும் பலரும் விண்ணப்பங்களைப் பதிவேற்றிவருகின்றனர்.

Comment here