Tamilnadu

குவைத் நாட்டில் உயிரிழந்த முத்துக்குமாரின் உடல் சொந்த ஊரில் தகனம் – கண்ணீரில் மூழ்கிய கிராமம்

Rate this post

லெட்சுமாங்குடியில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்று உயிரிழந்த முத்துக்குமாரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யபட்டது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதியில் இருந்து ஏராளமான நபர்கள் குவைத் நாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள்.

முத்துக்குமரன்

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி கொரடாச்சேரி சாலை மெயின் ரோடு தெருவை சேர்ந்த ராஜப்பா இவருடைய மகன் முத்துக்குமரன் (40). இவர் கடந்த 3ம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

முத்துக்குமாருக்கு வித்தியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குவைத்தில் இருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன் வேலை கஷ்டமாக உள்ளதாக மனைவி வித்தியாவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் குவைத்தில் வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் இறந்து விட்டதாக கடந்த 9-ம் தேதி லெட்சுமாங்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு குவைத் நாட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முத்துக்குமரனின் பெற்றோர் மனைவி மகன்கள் உறவினர்கள் இந்த சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் முத்துக்குமரனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர்களுடைய உறவினர்களும் அவருடைய மனைவி வித்தியாவும் கூறி கதறி அழுதனர்.

முத்துகுமாரன் உடல் மரக்கடை என்ற இடத்தில் இருந்து லெட்சுமாங்குடி நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல பட்டு, அவரது இல்லத்தில் உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க பட்டு, அவரது வீட்டின் அருகே உள்ள லெட்சுமாங்குடி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணிர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Comment here