Game

கேப்டன் தோனி செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள் – நடந்து என்ன?

Rate this post

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, திடீரென்று தன் சமூகவலைத்தளங்களில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால் ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் தோனி

இதனையடுத்து, சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தோனி கலந்துகொண்டார். அப்போது, டோனி ஓரியோ பிஸ்கட்டை அறிமுகப்படுத்தினார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், இந்த பிராண்ட் முன்னதாக 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இன்றைய பிராண்ட் விளம்பரத்தில், முந்தைய வெளியீடு மற்றும் உலகக் கோப்பை வெற்றியை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பேசினார். இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

தோனி ஓரியோ பிஸ்கட்டை அறிமுகப்படுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இதனால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஓரியோ பிஸ்கட்டை அறிமுகப்படுத்தத்தான் இப்படி தோனி செய்தாரா என்று அவரது ரசிகர்கள் கடுப்பில் சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Comment here