India

கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி

Rate this post

கடலால் வளர்ந்த தமிழர் பண்பாடு !

மூன்று புறமும் கடலால் சூழப்பட்டது நமது இந்தியப்பெருநாடு .

பண்டைய தமிழ்நாட்டுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் என முப்புறமும் கடல்கள் சூழ்ந்திருந்தன. இன்றுள்ள கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. எனவே, தமிழகத்தின் மூவெல்லையாயும் கடல்களே இருந்தன. .
வங்காளவிரிகுடா
அரபிக்கடல்
இந்திய ப் பெருங்கடல்
என்றுஅந்தக்கடல்கள் அழைக்கப்படுகிறது .ஆனால் எத்தனைக்காலமாய இந்தக்கடல்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன .ஏன் இவாறு அழைக்கப்படுகிறது என்பதற்கும் பின்னணியில் வரலாறு இருக்கிறது .

தமிழில் கடலானது

அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது

இத்தனை பெயர்கள் இருப்பதில் இருந்தே தொல் தமிழர்களுக்கும் கடலுக்கும் இருந்த நெருங்கியத் தொடர்பை அறியலாம் .

சங்ககாலத்தில் வங்காளவிரிகுடா குணக்கடல் என்று அழைக்கப்பட்டிருக்கிறது .

கிபி முதல் நூற்றாண்டு இரண்டாம் நூற்றாண்டில் அரபிக்கடல் குடக்கடல் என்று தமிழரால் அழைக்கப்பட்டிருக்கிறது .

தொல் தமிழகத்தில் வணிகம் செய்யவந்த யவனர்கள் இந்திய க்கடலை எரித்திரியக்கடல் என்று அழைத்திருக்கிறார்கள் .

சோழர்கள் தென்கிழக்காசியாவில் முழுவதும் வணிகத்தில் கோலோச்சியபோது வங்காளவிரிகுடாக்கடல் சோழர்கள் கடல் மற்றும் சோழர்கள் ஏரி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது .

பிறகு தென்கிழக்காசியா செல்வது படிப்படியாகக்குறைந்து உள்நாட்டு வணிகத்திற்காக வங்காளத்தின் கங்கை முகத்துவாரத்தில் புகுந்து வாரணாசி ,பாடனா முதலிய உள்நாடுகளில் வணிகம் செய்ததால் ப்பிரும்மபுத்திரா நதிமூலம் வங்காள தேசம் முழுவதும் திபெத் போன்ற இடங்களுக்கு சென்றதும் நடந்திருக்கிறதுஎனவே அது வங்காளக்கடல் என்று அழைக்கப்பட்டிருந்தது போலும் .

அதே சமயம் குடக்கடல் எனும் கடல் அரேபியா செல்வதற்கு வழியாக அமைந்ததால் அந்தக்கடல் அரபிக்கடலாக ஆனது போலும் .
வரலாற்றில் அந்தக்கடலுக்கு ரத்தினாகரா என்ற பெயரும் இருந்திருக்கிறது .
அபரா கடல் என்பதே அதன் பெயர். அபரா என்றால் மேற்கு
நாம் குணக்கடல் குடக்கடல் என்று அழைத்ததைப்போல் வடமொழி இலக்கியங்கள் வங்காளவிரிகுடாவை பிரச்சிய பயனீதி prachya payanidhi என்று அழைத்திருக்கின்றன .

வங்காள விரிகுடா என்ற பெயர் ஐரோப்பியர்களால் 17 நூற்றாண்டில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது

விரிகுடா என்பது நிலப்பரப்பைச் சுற்றி அகல வாக்கில் மிகப்பரந்த அளவில் காணப்படும் கடல் பரப்பாகும்.வளைகுடா என்பது அதற்கு நேர் மாறானதாகும். பெரிய விரிகுடா “வளைகுடா” என்று அழைக்கப்படும்

இன்னமும் சொல்லப்போனால் கிபி 7 ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா கடல் கலிங்கா சாகர் என்று அழைக்கப்பட்டதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன .
In 1196, according to the Sundarbans copper plate of Srimaddomanapala, there existed close to the Ganga’s confluence with the sea, a place named Dvarahataka. It was obviously a small riverine market centre (hataka, ie hattaka) functioning as a dvara or gateway o the sea. These inland riverine market centres/ports, whether in Vanga-Samatata area or in the lower regions of Radha, were less
prominent than Tamralipta or Samandar, but provided the crucial linkages between the littorals and the interior in a nadimatrka region like Bengal. The navigability of the many rivers, including
the Ganga, in the Bengal delta is unmistakably evident from the epigraphic account of fleets of boats on the Bhagirathi(sa khaluBhagirathipathapravartamana nauvata) and the description of Vikramapura in Vanga as a navigable tract (Vange Vikramapurabhage
navye).
Interestingly, nearly 480 km-long coastline of Bay of actual ancient name of Bay of Bengal was Kalinga Sagar or Kalinga Udadhi or Kalingedro.Similarly, renowned writer Chakradhar Mohapatra has given many hints in support of this in his literary work Swasita. There is also an elaborate description of Kalinga Sagar in ancient Buddhist literature
written during the 7th-8th century AD.

வங்காள விரிகுடாவிற்கு இன்னொரு தமிழ்ப்பெயர் பூர்வ கடல். இன்னமும் இதற்க்கு போர்ச்சுகீசியர்கள் தந்த ஒரு பெயர் வேறு இருக்கிறது .

தொல் தமிழர்களும் கடலும் வரலாற்றுக்காலத்திற்கு முன்பே நெருங்கியது தொடர்பு கொண்டிருந்தனர் .

ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.

தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம்.

இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும்.

அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.
பூம்புகார் ஆய்வு இன்னமும் கிடப்பில் உள்ளது .அது வெளிவந்தால் தான் தமிழர் உண்மைத்தொன்மை வெளியாகும் .

கடல் மூலம் வாணிகத்திற்காக உலகின் பல நாடுகளுக்குச் சென்ற தமிழ்வணிகர்களின் வரலாறு இன்னமும் சரிவர ஆராயப்படவில்லை .

தமிழர்வரலாறு மன்னர்களைவிட வணிகர்கள் மூலமே உலகம் முழுவதும் நிலைபெற்றது ,மீண்டும் அது வணிகத்தின் வெற்றி மூலமே நிலைபெறும் .

சொல்ல சொல்ல இனிக்கிறது சொல்லத்தான் நேரம் கிடைக்கவில்லை .நன்றி!

#அண்ணாமலைசுகுமாரன்

Comment here