India

கைதிகள் மனைவியுடன் தனி அறையில் அனுமதி – பஞ்சாப் சிறைத்துறை முடிவு

Rate this post

பஞ்சாப்பில் சிறையில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க சிறைத் துறை அனுமதி அளிக்க முடிவெடுத்துள்ளது.

வரும் 27ம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக பஞ்சாப்பின் நபா நகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் ஜெயிலில் இந்த நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

கைதிகள் மனைவியுடன் தனி அறையில் அனுமதி

ஜெயிலில் நீண்ட காலமாக உள்ள நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

கொடூர குற்றவாளிகள், ரவுடிகள், ஆபத்தான கைதிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு இச்சலுகை கிடையாது.

ஜெயிலில் இந்த சலுகையை பெறும் கைதி தனது கணவருடனோ அல்லது மனைவியுடனோ ஜெயில் வளாகத்தில் குளியலறையுடன் கூடிய தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்கப்படும்.

இந்த அனுமதி 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Comment here