கல்வி

கொரோனா குறள்

Rate this post

 

எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
இந்நோய்க்கு இன்றே உணர்.

தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு
கட்டியணைத்து பரவும் தவிர்.

கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று
மெய் கூப்பி வள௫ம் வாழ்வு.

துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை
துப்புபவர்கள் துப்பாமை நன்று.

இ௫மலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும்
இ௫ப்பது அறிகுறியென உணர்.

கூட்டம் கும்பலில் சேராமல் இ௫ப்பது
சாலச் சிறந்ததாம் இந்நாளில்.

கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று
காத்திடும் நோயினின்று உன்னை.

கடல்கடந்து வந்தாலே கடமையே உன்
உடல் பரிசோதிப்பது நன்று.

ம௫ந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை
மாற்றம் காண்பது நன்று.

கைகொண்டு புறம் தொட வேண்டாம் கழுவிய பின்
மெய் தொடுதல் நன்று.

Comment here