பொது

கொரோனா நோய் பரவுதல், பாதுகாப்பு

Rate this post

குறிஞ்சிப்பாடி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் நெய்வேலி லிக்னைட்சிட்டி ஜூனியர் சேம்பர் தலைவர் G.நடராஜன் உறுப்பினர்கள் இணைந்து வடலூர் அருகே உள்ள வெங்கட்டன்குப்பம் ஆதியன் காலனியில் வசிக்கும் 125 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி, கோதுமை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. வடலூர் காவல் ஆய்வாளர் P.கவிதா தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் B.அமுதா பாலசுப்பிரமணியன் (COVID 19 VOLUNTEER), K.கிருஷ்ணவேணி பழனிவேல், S.ஷியாமலாதேவி சந்திரமோகன், உதவி ஆசிரியர் P.ஞான ஆனந்தி புகழேந்தி, ஆகியோர் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்தனர். கொரோனா நோய் பரவுதல், பாதுகாப்பு, தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட இணைதொண்டர் R.சண்முகம் பேசினார். காவல் உதவி ஆய்வாளர் S.வெங்கடேசன், சமூக ஆர்வலர் B.வெங்கடேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராம தலைவர் P.கலியமூர்த்தி நன்றி கூறினார்.

Comment here