Tamilnadu

கோவை கார் வெடி விபத்து – பலியானவர் அடையாளம் காணப்பட்டார்

Rate this post

கோவை உக்கடத்தில் இந்து மத வழிபாட்டு தலமான கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது.

இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்ற நபர் இந்த கார் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த ஜமேசா முபினின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment here