Tamilnadu

கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – பரபரப்பு சம்பவம்

Rate this post

கோவை காந்திபுரம், வி.கே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் இன்று இரவு பெட்ரோல் குண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிவிட்டனர். ஆனால், நல்லவேளையாக பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வெடிக்கவில்லை.

இதனையடுத்து பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கு சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தை அறிந்து பாஜகவினர் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Comment here