Spirituality

சபரி மலை

Rate this post

இந்துக்கள் மிகவும் புனிதமாக நினைக்கும் ஆன்மீகத் தலங்களில் சபரி மலை ஐயப்பன் கோவிலும் ஒன்று. மற்ற கோவிலுக்கு செல்வது போல் இங்கு செல்வது கிடையாது. பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி விரதம் மேற்கொண்டு செல்வதுதான் இந்த கோவிலின் சிறப்பு.

ஒரு மண்டலத்திற்கு தீவிர விரதம் ஏற்று காடு மலை என பாராமல் சென்று மலை மீது ஏறி பதினெட்டு படிகளையும் ஏறி ஐயப்பனை தரிசிப்பது அத்தனை எளிதல்ல என்றும், அவரின் அருள் இருந்தால் மட்டுமே அவரை காண முடியும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

அதே பக்தர்கள்தான் இத்தனை காலம் தடை விதித்திருந்த பெண்களுக்கும் அருள் புரிகிறார் என்று கருத வேண்டும்.

இத்தனை ஆண்டு காலம் பெண்களை தடுத்து 10- முதல் 50 வயது வரை எந்த பெண்ணும் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று தடை விதித்திருந்தார்கள். இதனால் பல்வேறு பெண்கள் நல அமைப்புகளும், சமூக நல அமைப்புகளும் மற்றும் இள வக்கீல் அமைப்பு சரபாகவும் சுப்ரீம் கர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர்
இதனை அரசியல் சாசன அமர்விற்கு எடுத்துச் செல்லுமாறு கூறியிருந்தனர்,
அதனையடுத்து, பெண்களை அயப்பன் கோவிலுக்கு மறுப்பது இனப் பாகுபாட்டினை சொல்வது போலவும், அடிப்படை உரிமையை மறுப்பதாகவும் இருக்கிற்து என உச்ச நீதி மன்றம் சொல்லி இந்த வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு பரிந்துரை செய்தது.

அதன் தொடர்பாக இந்த அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா முதல் 5 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டது. அவ்வகையில் அதன் தீர்ப்பை இன்று அளித்தது.

அவ்வகையில் பெண்களை ஐயப்பன் கோவிலில் மறுப்பது அவர்களின் அடிப்படிய உரிமையை மறுப்பதாக இருக்கிறது. ஆகவே ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களும் செல்லலாம். வயது பேதமின்றி பெண்கள் செல்ல தடையில்லை என்ற பரபரப்பான தீர்ப்பை இன்று சுப்ரீம் கோர்ட் அளித்தது.

இதற்கு பல்வேறு ஆன்மீக அமைப்புகள் கண்டனங்களை தெரிவிக்கின்றன.

Comment here